புரட்சி கவிஞர் பாரதிதாசன் பிறந்தநாள் கருத்தரங்கம்
குமரி மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் சார்பில் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர் களின் பிறந்தநாள் விழா கருத்தரங்கம் நாகர்கோவில் ஒழுகினசேரியிலுள்ள பெரியார் மய்யத்தில் ஜூன் 9 ஆம் தேதி நடைபெற்றது. மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர் உ.சிவதாணு தலைமை தாங்கி உரையாற்றி னார். பொதுக்குழு உறுப் பினர் ம.தயாளன், இலக்கிய அணி செயலாளர் பா.பொன்னுராசன், நகர கழக அமைப்பாளர் ச.நல்லபெரு மாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நெல்லை மண்டல செய லாளர் கோ.வெற்றிவேந்தன் தொடக்க உரை ஆற்றினார். […]