புத்தரின் பகுத்தறிவு வாழ்க்கை நெறி (4)
புத்தரது அறவுரைக் கருத்துக்களைக் கொண்ட தொகுப்பான ‘தம்மபதம்’ என்ற நூலில் இப்படிக் கூறுகிறார்: “புத்திமான் ஆன ஒருவன், தனது எண் ணங்களை எங்கே அது செல்ல வேண்டுமோ அங்கே செலுத்தத் தயங்க மாட்டான். பயிற்சியால் பண்படுத்தப்பட்ட (கட்டுப்பாட் டால் பதப்பட்ட) அவனது சிந்தனை – எண்ண வோட்டம் அவனுக்கு நல்ல உடல் நலத்தையும், மகிழ்ச்சியையும் அளிக்கும் என்பது உறுதி. யாருடைய மனம் அமைதியற்று, நிலையற்று கண்ட இடங்களில் எல்லாம் தாவுகிறதோ, எந்தக் குறிக்கோளுமின்றி அலைபாய்ந்து அல்லாடு கிறதோ […]