பெரியாரியல் பயிற்சிக்கு பதிவு 03.05.2018

ஆத்தூரில் களப்பணி தொடங்கியது..! செல்லும் இடமெல்லாம் ஆர்வமுடன் பெரியாரியல் பயிற்சிக்கு பதிவு செய்கின்றனர்..!

ஆத்தூரில் களப் பணியை தோழர்கள் தொடங்கினார்கள். மாநில பகுத்தறிவு ஆசிரியரணி அமைப்பாளர் வா.தமிழ் பிரபாகரன் ,மாவட்ட ப.க. தலைவர் வ.முருகா னந்தம், மாவட்ட ஆசிரியர் அணி அமைப்பாளர் மாயக்கண்ணன், மாவட்ட தி.க, செயலாளர் சேகர் மற்றும் தோழர்கள் ஆசிரியர்களை வீட்டுக்குச் சென்று பயிற்சி ப்பட்டறைக்கு அழைக்க தொடங்கி உள்ளனர். கை யோடு பயிற்சி நன்கொடை தொகையினையும் தோழர்கள் மனமுவந்து அளித்து வருகிறார் கள். தோழர்களை பாராட்டி மகிழ்கி றோம்.