Resolutions about collecting subscriptions 08.04.2018

Resolutions about collecting subscriptions (like viduthalai, modernrationalist) at metur rationalist forum district level Discussion.

எடப்பாடி, ஏப். 17  எடப்பாடியில் மேட்டூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் பகுத் தறிவு ஆசிரியரணி கலந்துரையாடல் கூட்டம் 8.4.2018 அன்று மாவட்ட தலைவர் பகுத்தறிவாளர் கழகம் கோவி.அன்புமதி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட திராவிடர் கழக செயலாளர் கா.நா.பாலு, பொதுக்குழு உறுப் பினர் கை.முகிலன், புரவலர் மாவட்ட. ப.க. ஆ.சத்தியநாதன், மாவட்ட பகுத்தறிவு ஆசிரியரணி செயலாளர் கா.வேல் முருகன். ஆகியோர் முன்னிலை வகித்தனர். சுயமரி யாதை பிரச்சார நிறுவன உறுப்பினர் பழனி புள்ளையண்ணன், மாநில பகுத்தறிவு ஆசிரியரணி அமைப்பாளர் தமிழ் பிர பாகரன் ஆகியோர் கருத்துரை வழங்கி னார்கள்,  மாவட்ட பகுத்தறிவாளர் கழகம், செயலாளர் சி.மதியழகன் நன்றி கூறினார்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்

தீர்மானம் 1:  விடுதலை’ நாளிதழ்.. உண்மை’ மாத இதழ், ஆங்கில ஏடு மாடர்ன்ரேசனலிஸ்ட்’, பெரியார் பிஞ்சு’ குழந்தைகள் இதழ்கள், சந்தா சேர்த்தல் வேண்டும் என  தீர்மானிக்கப்படுகிறது

தீர்மானம் 2: இரண்டு மாதத்திற்கு ஒரு முறை மாவட்ட கலந்துரையாடல் நிகழ்வு நடத்த வேண்டும் என தீர்மானிக்கப்படுகிறது.

தீர்மானம் 3: மே மாதம் பெரியார் பேசு கிறார் என கருத்தரங்கம் நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது..

4. இரங்கல் தீர்மானம்: அறிவியல் அறிஞர் ஸ்டீபன் ஹாக்கிங் மற்றும் சேலம் பெரியார் பெருந்தொண்டர் வடிவேல் அவர் களின் துணைவியார் திருமதி எல்லம்மாள், பெரியார் பற்றாளர் கவிஞர்  எழுஞாயிறு ஆகியோரின் மறைவிற்கு இக்கூட்டம் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள் கிறது.

Refer: விடுதலை, viduthalai