District level Discussion and resolutions 08.04.2018

District level Discussion and resolutions 08.04.2018 After noon 2.30PM

பழனி, ஏப்.17 பழனி கழக மாவட்ட பகுத் தறிவாளர் கழக கலந்துரையாடல் கூட்டம் 8.4.2018 பிற்பகல் 2.30 மணிக்கு மாவட்ட ப.க.தலைவர் ச.திராவிடச்செல்வன் தலை மையில் பழனி பெரியார் நகர தந்தை பெரியார் படிப்பகத்தில் நடைபெற்றது.

மாவட்ட ப.க.செயலாளர் சி.மெர்ஸி ஆஞ்சலா மேரி வரவேற்றார். மாநில துணைத் தலைவர் கா.நல்லதம்பி அவர்கள் கலந்து கொண்டு சிறப்பான வழிகாட்டுதல் உரை வழங்கினார். இதில் மாவட்ட கழக தலைவர் பெ.இரணியன், துணைத்தலைவர் அங்கப்பன், மாவட்ட அமைப்பாளர் சி.இராதாகிருட்டிணன், மண்டல இளை ஞரணி குண.அறிவழகன், மகளிரணி சி.அமலசுந்தரி, மாவட்ட துணைச் செயலாளர் க.வீரக்குமார் மற்றும் பலர் கலந்து கொண் டனர். இறுதியாக சி.இராதாகிருட்டிணன் நன்றி கூற தேநீர் பிஸ்கட் வழங்கப்பட்டு கூட்டம் இனிதே முடிவுற்றது. மேற்படி கலந்தாய்வுக் கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

1)            அறிவியல் அறிஞர் ஸ்டீபன் ஹாக் கிங் அவர்களின் மறைவிற்கு ஆழ்ந்த இரங் கல் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

2)            மாவட்டத்திற்கு 100 மாடர்ன் ரேசனலிஸ்ட் சந்தா சேர்ப்பது.

3)            உறுப்பினர்களின் சேர்க்கையை அதிகப்படுத்த முயற்சி மேற்கொள்வது.

4)            பழனியில் பகுத்தறிவாளர் கழக மாநாடு நடத்துவதற்கு தமிழர் தலைவரிடம் தேதி கோருவது.

5)தந்தை பெரியார், புரட்சியாளர் அம் பேத்கர், புரட்சியாளர் லெனின் சிலை களை சேதப்படுத்திய பிஜேபி ஆர்.எஸ்.எஸ்.சங்பரிவார் காவிக் கூட்டங்களை வன்மை யாகக் கண்டிக்கிறது.

6)அறிவியலுக்குபுறம்பானவற்றை பாடத் திட்டங்களில் சேர்க்கக் கூடாது. பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் கல்வி பாடத் திட்டங்களில் இந்துத்துவாவை திணிக்கும் முயற்சி தொடர்ந்து நடைபெற்ற வருகின்றது. அரியானா மாநில அரசு காயத்ரி மந்திரத்தை மாணவர்களின் பாடத் திட்டத்தில் சேர்த்து பயிற்றுவிக்கும் நிகழ்வு நடந்து கொண்டிருப்பதை வன்மையாக கண்டிக்கிறது.

7) தொலைக்காட்சிகளிலும் வானொலி களிலும் அறிவியல் மனப்பான்மைக்கு எதிராக மூடநம்பிக்கையை வளர்க்கும் நிகழ்ச்சிகள் அதிகம் ஒளிபரப்பி வருவதைக் கண்டிப்பதுடன் அதனை எதிர்த்து அந்தந்த வளாகங்களில் ஆர்ப்பாட்டம் நடத்த ஆயத்தமாகவும் கேட்டுக் கொள்கிறது.

8)            பழனி மாவட்ட பகுத்தறிவாளர் கழக துணைச் செயலாளராக கே.வீரக்குமார் அவர்களை துணைத் தலைவர் அவர்களின் வழிகாட்டுதலின்படி நியமிக்கவும் கேட்டுக் கொள்கிறது.

Refer:விடுதலை ,viduthalai