புரட்சி கவிஞர் பாரதிதாசன் பிறந்தநாள் கருத்தரங்கம்

குமரி மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் சார்பில் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர் களின் பிறந்தநாள் விழா கருத்தரங்கம் நாகர்கோவில் ஒழுகினசேரியிலுள்ள பெரியார் மய்யத்தில் ஜூன் 9 ஆம் தேதி நடைபெற்றது.

மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர் உ.சிவதாணு தலைமை தாங்கி உரையாற்றி னார். பொதுக்குழு உறுப் பினர் ம.தயாளன், இலக்கிய அணி செயலாளர் பா.பொன்னுராசன்,  நகர கழக அமைப்பாளர் ச.நல்லபெரு மாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நெல்லை மண்டல செய லாளர் கோ.வெற்றிவேந்தன் தொடக்க உரை ஆற்றினார்.

நேசமணி கல்லூரியின் தமிழ்த்துறை தலைவர் பேரா சிரியர் குமாரசெல்வா சிறப் புரை ஆற்றினார்.

புரட்சிக் கவிஞரின் திராவிட இயக்கப் பிரச் சாரங்கள், தமிழ் உணர்வு அவரின் சிறப்பியல்புகள் குறித்து விரிவாக எடுத்துரைத் தார்.

நகர கழக துணைத் தலைவர் கவிஞர் எச்.செய்க் முகமது, நகர இளைஞரணி செயலாளர் இரா.இராஜேஷ், மகளிரணி தோழியர் மஞ்சுகுமார், திராவிடர் கழகத் தோழர்கள், சந்தோஷ்குமார், ஆனந்த், குமாரதாஸ், பிரேம் கம்யூனிஸ்ட் கட்சித் தோழர் கள் கு.சந்திரன், ஈத்தாமொழி எஸ்.தாமோதரன், திமுக தொழிற்சங்க நிர்வாகி தாமஸ், இயக்க ஆதரவா ளர்கள் சி.காப்பித்துரை, குமரிச்செல்வன், த.ராமன் மற்றும் பலர் இந்தக் கருத் தரங்கில் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.