பல்வேறு தளங்களில் உள்ள பகுத்தறிவாளர்களை ஒருங்கிணைப்பதே முதலாவது பணி!

காரைக்குடி, தருமபுரி மாவட்ட  பகுத்தறிவாளர்  கழக கலந்துரையாடலில் முடிவு

காரைக்குடி, செப்.29  காரைக் குடி மாவட்ட  பகுத்தறிவாளர்  கழக  மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் 26.09.2018 மாலை 6 மணிக்கு என்.ஆர்.சாமி மாளி கையில் நடைபெற்றது. மாவட்ட ப.க. தலைவர்  முனைவர் சு.முழுமதி  தலை மையில் நடைபெற்றது. மண்டலத் தலைவர் சாமி திராவிடமணி, மண்டல செய லாளர் அ.மகேந்திரராசன், மாவட்ட தலைவர் ச.அரங்க சாமி, மாவட்ட செயலாளர் ம.கு.வைகறை ஆகியோர் முன் னிலை வகித்தனர்.  நிகழ்வில் பங்கேற்றுச் சிறப்பித்த  பகுத் தறிவு ஆசிரியர் அணி மாநில அமைப்பாளர் சி. இரமேசு கலந்துரையாடல் கூட்டத்தின் நோக்கம் குறித்தும், கழகப் புரவலர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் வழிகாட்டுதல் களையும், தமிழகம் எதிர் நோக் கும் பல்வேறு அபாயங்கள் குறித்தும் அதற்கு நாம் ஆற்ற வேண்டிய பணிகள் குறித்தும் சிறப்புரை ஆற்றியதோடு, கூட்ட தீர்மானங்களையும் வாசித்தார்.  தொடர்ந்து உரையாற்றிய பக மாநில துணைத் தலைவர் முனைவர் மு.சு.கண்மணி, பகுத் தறிவாளர் கழகத்தின் சார்பில் மாணவர்கள்,  பெண்கள் பங்கேற்கும் கருத்தரங்கம்,  குழந்தைகளை ஊக்கப்படுத்தும் நிகழ்ச்சிகள் நடத்துதல், சிந்தனைக்களம் நூலாய்வு அரங்கத்தை தொய் வின்றி நடத்துதல், மாடர்ன் ரேசனலிஸ்ட் இதழுக்கு சந்தா இலக்கை முடித்தல்( இதுவரை 85) , அக்டோபர் 19ல் தஞ்சையில் நடைபெற இருக்கும் மாநில பக கலந்துரையாடல் கூட்டத்தில் மாவட்ட செயல்பாட்டு ஆண்ட றிக்கை சமர்பித்தல் போன்ற அமைப்பின் செயல் திட்டம் குறித்து உரையாற்றினார்.

நிறைவாக எழுத்தாளர்   தோழர் குமரன்தாஸ் நன்றி கூறினார்.

புதிய பொறுப்பாளர்கள்:

1. பகுத்தறிவு எழுத்தாளர் மன்ற மாவட்ட  அமைப்பாளராக எழுத்தாளர் தோழர் குமரன்தாஸ்.

2.பகுத்தறிவு ஆசிரியரணி மாவட்ட அமைப்பாளராக தோழர் த. பாலகிருஷ்ணன்  3.பகுத்தறிவாளர் கழக மாவட்ட துணைச் செயலாளராக தோழர் ச.தமிழினியன்(காரைக்குடி மின்பகிர்மான கோட்ட அலு வலர்).

4.காரைக்குடி நகரச் செய லாளராக தோழர் அ.பாலகிருஷ் ணன் (இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கழனிவாசல் கிளை மேலாளர்)

நிகழ்வில் பங்கேற்றுச் சிறப்பித்தவர்கள் :

காளையார்கோயில் ஒன்றிய பக அமைப்பாளர் யா.இராச சேகர்,மாவட்ட கழக துணைத் தலைவர் கொ.மணிவண்ணன், காளையார்கோயில் நில அள வையர் எஸ்.சோமன், வாரியன் வயல் ஏ.ஜோசப், எஸ்.எஸ். கோட்டை எஸ்.ராஜ்குமார், காரைக் குடி நகர பக தலைவர் கி.மணி வண்ணன், நகர கழகத் தலைவர் ந.செகதீசன் , நாகர்கோயில் என். இராஜமணி, த.திருமேனி, கிராம நிர்வாக அலு வலர் சா.முருகையா, மாவட்ட கழக துணைச் செயலாளர் இ.ப.பழனிவேலு ஆகியோர் பங்கேற்றுச் சிறப்பித்தனர்.

தருமபுரி

தருமபுரி மாவட்ட பகுத்த றிவாளர் கழகம் & பகுத்தறிவு ஆசிரி யரணி கலந்துரையாடல் கூட்டம் 25.09.2018 காலை 10 மணிக்கு சிறப்பாக நடைப் பெற்றது.

கூட்டத்திற்கு பகுத்தறிவாளர் கழக மாவட்ட தலைவர் கதிர் செந்தில் தலைமை வகித்தார். மண்டல கழக தலைவர் வீர.சிவாஜி மாவட்ட கழகத் தலைவர் இ.மாதன், மாவட்ட செயலாளர் அ.தமிழ்செல்வன், மாவட்ட அமைப்பாளர் சி.காமராசு ஆகி யோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட பகுத்தறிவு ஆசிரியரணி தலைவர் இர.கிருஷ்ணமூர்த்தி வரவேற்புரை ஆற்றினார். பகுத்தறிவாளர் கழக மாநில துணைத்தலைவர் அண்ணா சரவணன் மற்றும் பகுத்தறிவு ஆசிரியரணி மாநில அமைப் பாளர் வா.தமிழ்பிரபாகரன் கருத் துரை வழங்கினர்.

சிறப்பு வாய்ந்த கலந்துரை யாடல் கூட்டத்தில் மாடர்ன் ரேசனலிஸ்ட் இதழுக்கு முதல் கட்டமாக ஊமை.ஜெயராமன் மாநில அமைப்பாளர் அவர்கள் 24 சந்தாவும், மாநில அமைப்பாளர் மகளிர் பாசறை தகடூர்.தமிழ் செல்வி அவர்கள் 11 சந்தா வழங்கி வழிகாட்டி உரை நிகழ்த்தினர். மண்டல தலைவர் சிவாஜி அவர்கள் 10 சந்தாவும், மாவட்ட பகுத்தறிவு ஆசிரியரணி  மாவட்ட அமைப்பாளர் அண்ணாதுரை அவர்கள் 10 சந்தாவும், பகுத்தறி வாளர் கழக மாவட்ட தலைவர் கதிர்.செந்தில் பகுத்தறிவு ஆசிரி யரணி மாவட்ட தலைவர் இரா.கிருட்டிணசாமி இருவரும் இணைந்து 46 சந்தாவும் ஆக மொத்தம் 100 ரேசனலிஸ்ட் சந்தாவிற்கான தொகை 30,000 வழங்கப்பட்டது.

மேலும் பகுத்தறிவாளர் கழகம் மற்றும் பகுத்தறிவு ஆசிரியரணி உறுப்பினர் படிவம் 50 பேருக்கான தொகை 5000 வழங்கப்பட்டது.

பகுத்தறிவு ஆசிரியரணிக்கு கீழ்காணும் தோழர்கள் ஆசிரியர் மு.பிரபாகரன் (மாவட்ட செயலாளர்) ஆசிரியர் ந.அண்ணா துரை (மாவட்ட அமைப்பாளர்), ஆசிரியர் து.குமார் (துணை செயலாளர்) என மாவட்ட பொறுப்பாளர்களாக நியமிக்கப் பட்டனர். மேலும் ஒன்றியம் வாரியாக ஆசிரியர்கள் மு.சங்கர் தரும்புரி, மு.அழகா னந்தம் நல்லம்பள்ளி, மா.கோவிந்தசாமி பென்னகரம், சிவசண்முகம் காரிமங்கலம், குமார் பாலக்கோடு, தீ.சிவாஜி அரூர் புஷ்பராஜ் மொரப்பூர், க.ஜீவிதா பாப்பிரெட்டிப்பட்டி ஆகியோர் பகுத்தறிவு ஆசிரி யரணி அமைப்பாளர்களாக நிய மிக்கப்பட்டனர்.