பகுத்தறிவாளர் கழகம், பகுத்தறிவு ஆசிரியரணி உறுப்பினர்கள் சேர்ப்பு

கிருட்டினகிரி மாவட்ட பகுத்தறிவாளர் கழகம், பகுத்தறிவு ஆசிரியரணி சார்பில் உறுப்பினர் சேர்ப்பு நடைப்பெற்றது. நகரம் முழுவதும் நடைப்பெற்ற இப்பணியில் பத்தொன்பது பேர் தங்களை உறுப்பினர்களாக இணைத்துக்கொண்டனர்.அனைவரும் தங்களை பகுத்தறிவாளர் கழகத்தில் இணைத்துக்கொண்டு தொடர்ந்து தந்தை பெரியார் குறித்த கருத்தரங்கு நடைப்பெற வேண்டும் என்றும், அதில் பங்கேற்க தாங்கள் ஆர்வமாக உள்ளதாக மகிழ்வோடு கூறினார்கள்.திராவிடர் கழகம் அதன் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் பணி பாராட்ட தக்க வகையில் உள்ளது, என பெருமையோடு எடுத்துரைத்தனர்.இந்நிகழ்வில் மாவட்ட தலைவர் ஆசிரியர் லூயிஸ்ராஜ்,ஆசிரியரணி மாவட்ட அமைப்பாளர் ஜோதிமணி,அகரம் சதிஸ்,நகர திராவிடர் கழக தலைவர் மாணிக்கம், மண்டல இளைஞரணி செயலாளர் வ.ஆறுமுகம்,   அழகரசன் மற்றும் மாநில துணை தலைவர் அண்ணா. சரவணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.