பகுத்தறிவாளர் கழகம் – பகுத்தறிவு ஆசிரியரணிக்கு உறுப்பினர்கள் சேர்க்கும் பணி

ஈரோடு, செப்.12 09.09.2018 அன்று மாலை 4.30 மணிக்கு ஈரோடு பெரியார் மன்றத்தில் பகுத்தறி வாளர் கழகம் மற்றும் பகுத்தறிவாளர் கழக ஆசிரியரணி கலந்துரையாடல் கூட்டம் ஈரோடு, கோபி, மேட்டுப்பாளையம் உள்ளிட்ட ஒருங் கிணைந்த மாவட்டங்களின் ஆலோசனைக் கூட்டம் மாநில பகுத்தறிவாளர் கழக மாநில துணைத் தலைவர் தர்ம.வீரமணி அவர்கள் தலைமை தாங்கினார்.

ஈரோடு மாவட்ட ப.க. அமைப்பாளர் பி.என்.எம்.பெரியசாமி வரவேற்புரையாற்றினார். திராவிடர் கழக அமைப்புச் செயலாளர் த.சண் முகம், மாவட்ட செயலாளர் கு.சிற்றரசு, மாவட்டத் தலைவர் இரா.நற்குணன், மாநில இளைஞரணி துணை செயலாளர் தே.காமராஜ் முன்னிலை வகித்து கருத்துரையாற்றினர்.

பகுத்தறிவாளர் கழகம் பற்றியும் இன்றைய சூழ்நிலையில் தந்தை பெரியாரின் பெரும் பணியை மக்களிடம் கொண்டு செல்லும் பணி யில் பகுத்தறிவாளர் கழகம் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது பற்றி மாநில பகுத்தறிவாளர் கழகத் தலைவர் மா.அழகிரிசாமியும், பேராசிரியர் ப.காளிமுத்துவும் சிறப்புரை ஆற்றினார்கள்.

இக்கலந்துரையாடல் கூட்டத்தில் மேட்டுப் பாளையம் பகுத்தறிவாளர் கழக மாவட்டத் தலைவர் சு.வேலுச்சாமி, திராவிடர் கழக ஈரோடு மண்டலத் தலைவர் ப.ராஜமாணிக்கம், கோபி மாவட்ட ப.க. பொருளாளர், வி.சிவக்குமார், அ.குப்புசாமி, மேட்டுப்பாளையம் ப.க. மாவட்ட செயலாளர் பெ.திருவள்ளுவன், மேட்டுப் பாளைய மாவட்ட ப.க. தலைவர் கா.சு.ரங்கசாமி, சி.கிருஷ்ணசாமி, ஆ.ஜீவா னந்தம், இரா.அரிச்சந்திரன், பகுத்தறிவாளர் கழக மாவட்ட அமைப்பாளர் கோ.கு.மணி, ஈரோடு மாணவர் கழக மாவட்ட தலைவர் மதிவாணன் பெரியசாமி, த.கவுதம், செயலாளர் வெ.குண சேகரன், கோபி மாவட்ட செயலாளர் திரு நாவுக்கரசு, வீ.தேவராஜ், திமுக மகளிரணி பொறுப்பாளர் கனிமொழி நடராஜன், ஆனந்த லட்சுமி ஆகியோர் கலந்து கொண்டு கருத்துரை ஆற்றினார்கள்.

மேற்படி ஆலோசனைக் கூட்டத்தில் ஈரோடு நகர பகுத்தறிவு ஆசிரியரணியின் தலைவராக ஆசிரியர் ரா.அரிச்சந்திரனை மாநில தலைவர் மா.அழகிரிசாமி நியமித்தார்.

தீர்மானங்கள்:

1. இரங்கல் தீர்மானம்: தமிழக முன்னாள் முதல்வர் மானமிகு சுயமரியாதைக்காரர் முத் தமிழறிஞர் கலைஞர் மற்றும் கழக முன்னணித் தோழர் நடராசன் துணைவியார் குஞ்சிதம் அவர்களின் மறைவிற்கும் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

2.ராஜீவ் கொலை வழக்கில் 27 ஆண்டு களுக்கும் மேலாக சிறையில் வாடும் பேரறி வாளன் உள்ளிட்ட 7 தமிழர்களையும் தமிழக அமைச்சரவை நிறைவேற்றிய தீர்மானத்திற்கு நன்றியும், ஏழு பேரையும் உடனே விடுதலை செய்ய ஆளுநர் அவர்கள் உடனடியாக நட வடிக்கை எடுக்க இக்கூட்டம் கேட்டுக் கொள் வதாகவும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது 3. தி மாடர்ன் ரேசனலிஸ்ட் இதழுக்கு சந்தா சேர்ப்பது என்றும் தீர்மானிக்கப்பட்டது.

4. பகுத்தறிவாளர் கழகம் மற்றும் பகுத்தறிவு ஆசிரியரணிக்கு புதிய உறுப்பினர்களை அதிக மாக சேர்க்க அனைவரும் தீவிர பணியாற்றும்படி கேட்டுக் கொள்வதாகத் தீர்மானம் நிறைவேற் றப்பட்டது.

இந்நிகழ்வை மாவட்ட பகுத்தறிவாளர் கழக அமைப்பாளர் பி.என்.எம்.பெரியசாமி அவர்கள் ஒருங்கிணைத்தார். இறுதியாக ப.க.ஆசிரியரணி நகர தலைவர் தோழர் ரா . அரிச்சந்திரன் நன்றி சொல்லி நிறைவு செய்தார்.