பகுத்தறிவாளர் கழகம் தனித்தன்மையுடன் செயல்படவேண்டும்!


தமிழர் தலைவரின் வேண்டுகோளை வழிமொழிந்து பகுத்தறிவாளர் கழக மாநில தலைவர் பேச்சு

கணியூர், நவ. 5 -பகுத்தறிவாளர் கழகம் தனித் தன்மையுடன் செயல்படவேண்டு மென்ற தமிழர் தலைவரின் வேண்டுகோளை வழி மொழிந்து பகுத்தறிவாளர் கழக மாநில தலைவர் பேசினார்.

பகுத்தறிவாளர் கழகத்தின் தாராபுரம் கழக மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் 27.10.2018 சனிக்கிழமை மாலை 6 மணி யளவில் கணியூர் கிருஷ்ணா பாத்திரக் கடையில் நடைபெற்றது.கூட்டத்தில் பகுத் தறிவாளர் கழக உறுப்பினர் சேர்க்கை, “தி மாடர்ன் ரேசனலிஸ்ட்” சந்தா சேகரித்தல், ஒன்றிய, நகரப் பகுதிகளில் அமைப்பினை ஏற்படுத்துதல், பகுத்தறிவாளர் கழக பொன் விழா மற்றும் பகுத்தறிவாளர் கழக செயல் பாடுகள் தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது.

இக்கூட்டத்திற்கு பகுத்தறிவாளர் கழக மாநில துணைத் தலைவர் தரும.வீரமணி அவர்கள் தலைமை தாங்கினார்.பகுத்தறி வாளர் கழகத்தைச் சார்ந்த க.வேலுமணி அனைவரையும் வரவேற்றார்.திராவிடர் கழகத்தின் தாராபுரம் கழக மாவட்ட தலை வர் க.கிருஷ்ணன்,செயலாளர் க.சண்முகம், வழக்குரைஞரணி பொறுப்பாளர் நா.சக்தி வேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மா.அழகிரிசாமி உரை

இந்நிகழ்வில் பங்கேற்றுச் சிறப்புரை நிகழ்த்திய பகுத்தறிவாளர் கழக மாநில தலைவர் மா.அழகிரிசாமி அவர்கள் பேசிய தாவது:   பகுத்தறிவாளர் கழகத்தில் பல்துறை அறிஞர்களை உறுப்பினராகச் சேர்க்கும் வகையில் கழகப் பொறுப்பாளர்கள் அய ராது பணியாற்றி பகுத்தறிவாளர் கழகம் தனித்தன்மையுடன் செயல்படவேண்டும் என்ற பகுத்தறிவாளர் கழகப் புரவலர் ஆசிரியர் அவர்களின் வேண்டுகோளை நிறைவேற்றவேண்டும்.

தற்போது 60 கழக மாவட்டங்களில் பகுத்தறிவாளர் கழக அமைப்பு உள்ளது. அதை ஒன்றிய,நகரப் பகுதிகளில் விரிவு படுத்தி மாதந்தோறும் கலந்துரையாடல் கூட்டங்கள் நடத்தப்படவேண்டும். ஆசிரி யப் பெருமக்களுக்கு மாணவர்களைச் சந்திக் கும் வாய்ப்பு அதிகம் என்பதால் பகுத்தறி வாளர் கழகத்தில் ஆசிரியரணி உருவாக்கி மாணவர்களிடையே பகுத்தறிவுக் கருத்துக் களைக் கொண்டு செல்வதோடு, மாவட்ட தலைநகரங்களில் பகுத்தறிவுக் கருத்தரங் குகளை சிறப்பாக நடத்தவேண்டும்.

திராவிடர் கழகம், திராவிடர் கழக இளைஞரணி, மாணவர் கழக, மகளிரணி, தொழிலாளரணி  தோழர்கள் அனைவரும் கழக வெளியீடுகளான ” விடுதலை” நாளி தழ், “உண்மை” மாதமிருமுறை, “பெரியார் பிஞ்சு” மாத இதழ் ஆகியவற்றிற்கு சந்தாக் கள் சேர்க்கும் பணியை அன்றாடப் பணி களில் ஒன்றாகக் கருதி செயல்படுத்தி வருவதைப்போல் பகுத்தறிவாளர் கழகப் பொறுப்பாளர்கள் ஒவ்வொருவரும் கழக வெளியீடான” தி மாடர்ன் ரேசனலிஸ்ட்” மாத இதழுக்கு நிர்ணயிக்கப்பட்ட சந்தா இலக்கினை முடித்துத் தருவதோடு, சந்தா சேர்க்கும் பணியை அன்றாடப் பணிகளுள் ஒன்றாகக் கருதி ” தி மாடர்ன் ரேசனலிஸ்ட்” மாத இதழை பகுத்தறிவாளர்களின் கைகளில் தவழச் செய்திட அரும்பணியாற் றிடவேண்டும் என்று அவர் உரையாற்றினார்.

தீர்மானம்

கடந்த 19.10.2018 அன்று தஞ்சை வல் லத்தில் நடைபெற்ற மாநில பகுத்தறிவாளர் கழக கலந்துரையாடல் கூட்டத்தில் நிறை வேற்றப்பட்ட தீர்மானங்களை ஏற்றுச் செயல்படுத்துவதென கூட்டத்தில் தீர்மானிக் கப் பட்டது.

பங்கேற்றோர்

தாராபுரம் கழக மாவட்ட பகுத்தறிவாளர் கழகத்தைச் சார்ந்த கணியூர் ச.ஆறுமுகம், வே.கலையரசன், மா.தங்கவேல், தாராபுரம் மு.மாரிமுத்து, மு.மோகன், பழனி கழக மாவட்ட ப.க. தலைவர் ச.திராவிடச் செல்வன், திராவிடர் கழகத்தின் தாராபுரம் கழக மாவட்ட அமைப்பாளர் கி.மயில்சாமி, கோவை மண்டல இளைஞரணிச் செய லாளர் ச.மணிகண்டன், கணியூர் க. அர்ச் சுணன், உடுமலை  நகரத் தலைவர் போடி பட்டி க.காஞ்சிமலையன், தாராபுரம் கழக மாவட்ட மாணவர் கழக அமைப்பாளர் கி.இளந்தென்றல், மடத்துக்குளம் தி.சிவக் குமார் (திதொச) உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தின் நிறைவாக பகுத்தறிவாளர் கழகத்தைச் சார்ந்த உடுமலை த.முருகேசன் நன்றி கூறினார்.

கூட்டத்தில் அறிவிக்கப்பட்ட பொறுப்பாளர்கள்

தாராபுரம் கழக மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர்: க.வேலுமணி, செயலாளர்: வே.கலையரசன், அமைப்பாளர்: த.முரு கேசன், தாராபுரம் ஒன்றிய ப.க. தலைவர்: பு.முருகேசு, செயலாளர்: க.சு.உமாபதி, வெள்ளக்கோயில் ஒன்றிய ப.க.தலைவர்: சு.ஜெகநாதன், செயலாளர்: சிவக்குமார், மடத்துக்குளம் ஒன்றிய ப.க. தலைவர்: மா.தங்கவேல், செயலாளர்: பெரியசாமி, உடுமலை ஒன்றியம் ப.க.தலைவர்: ந.வெங் கடாசலம், செயலாளர்: நா.செல்வராசு