பகுத்தறிவாளர் கழகம், ஆசிரியரணி மாநில பொறுப்பாளர்கள் கூட்டம்- தருமபுரி

 

தருமபுரி, ஆக. 19 பகுத்தறிவாளர் கழகம், பகுத்தறிவு ஆசிரியரணி மாநில பொறுப் பாளர்கள் கூட்டம் 12.8.2018 அன்று காலை 10.30 மணிக்கு தருமபுரி பெரியார் மன்றத்தில் பகுத்தறிவாளர் கழக மாநில தலைவர் மா.அழகிரிசாமி தலைமையில் நடந்தது.

 

திராவிடர் கழக மாநில அமைப்புச் செயலாளர் ஊமை.ஜெயராமன், மகளி ரணி, மகளிர் பாசறை மாநில அமைப் பாளர் ஜெ.தமிழ்ச்செல்வி, மண்டல தலைவர் பெ.மதிமணியன், மண்டல செயலாளர் கரு.பாலன், மாவட்ட தலை வர் இளைய.மாதன் ஆகியோர் முன் னிலை வகித்தனர். மாநில பகுத்தறிவாளர் கழக துணைத் தலைவர் அண்ணா. சரவணன் வரவேற்புரையாற்றினார். கூட் டத்தின் நோக்கங்களை விளக்கி மாநில பகுத்தறிவாளர் கழக தலைவர் மா.அழகிரிசாமி பேசினார். பகுத்தறிவாளர் கழகப் பொதுச்செயலாளர் இரா.தமிழ்ச் செல்வன், மாநில பொறுப்பாளர்கள் ஆற்ற வேண்டிய பணிகள் பற்றி பேசினார்.

 

கூட்டத்தில் மாநில பகுத்தறிவாளர் கழக துணைத் தலைவர்கள் கே.டி.சி. குருசாமி, கா.நல்லதம்பி, கோபு.பழனி வேல், மு.சு.கண்மணி, தரும.வீரமணி, அ.தா.சண்முகசுந்தரம், அண்ணா.சரவ ணன், மாநில பகுத்தறிவு ஆசிரியரணி அமைப்பாளர்கள் எஸ்.அருள்செல்வன், சி.ரமேசு, வா.தமிழ்பிரபாகரன் ஆகியோர் இதுவரை தாங்கள் ஆற்றிய பணிகள் பற்றியும், ஆற்ற இருக்கும் பணிகள் பற்றி யும் விளக்கிப் பேசினார்கள்.

கூட்டத்தின் தொடக்கத்தில் திமுக தலைவர் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் மறைவுக்கு ஒரு நிமிடம் அமைதிகாத்து வீரவணக்கம் செலுத்தப்பட்டது. பார்வையாளர்களாக தருமபுரி மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர் கதிர்.செந்தில்குமார், மாவட்ட செயலாளர் மாரி. கருணாநிதி, மாவட்ட பகுத்தறிவு ஆசிரியரணி தலைவர் இரா.கிருட்டிணமூர்த்தி, மாவட்ட இளை ஞரணி தலைவர் வ.ஆறுமுகம் ஆகியோர் கலந்து கொண்டனர். ப.க.துணைத் தலை வர் கே.டி.சி.குருசாமி நன்றியுரையாற் றினார்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்

1) திமுக தலைவரும், மேனாள் முதலமைச்சருமான முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் மறைவுக்கு இக் கூட்டம் வீரவணக்கத்தையும், ஆழ்ந்த இரங்கலையும்  தெரிவித்துக் கொள்கிறது.

2) பகுத்தறிவாளர் கழகத்தின் சார்பில் பகுத்தறிவு ஆங்கில ஏடான மாடர்ன் ரேசனலிஸ்ட்’ சந்தா தொகையினையும், பகுத்தறிவாளர் கழக உறுப்பினர் படி வத்தையும் செப்டம்பர் மாதம் இறு திக்குள் முடித்து தலைமைக் கழகத்திடம் ஒப்படைத்திட தீர்மானிக்கப்படுகிறது.

3) மாதம் தோறும் மாவட்ட அமைப் புகளின் சார்பில் கருத்தரங்குகளை நடத் துவது என தீர்மானிக்கப்படுகிறது.

4) மாநில கழக பொறுப்பாளர்கள் மாவட்டம் தோறும் பயணம் செய்து மாவட்ட கலந்துரையாடல் கூட்டங்களை நடத்துவது என தீர்மானிக்கப்படுகிறது.

5) தென்சென்னை மாவட்ட பகுத் தறிவு ஆசிரியரணி (கல்லூரிகள்) அமைப் பாளராக பேராசிரியர் குமார் அவர்களும் புதுச்சேரி பகுத்தறிவு ஆசிரியரணி (கல் லூரிகள்) அமைப்பாளராக பேராசிரியர் ஏ.முத்தமிழ் அவர்களும் நியமனம் செய் யப்படுகிறார்கள்.