உரத்தநாடு ஒன்றியம் நெடுவாக்கோட்டை திராவி டர் கழக கிளை கலந்துரையாடல் கூட்டம், மாவட்ட திராவிடர் கழக தலைவர் சி.அமர்சிங் தலைமையில் 12.6.2019 அன்று இரவு 7 மணி அளவில் நெடுவாக்கோட்டைதோ.தம்பிக் கண்ணு அவர்கள் இல்லத்தில் நடை பெற்றது.
மாநகராட்சி செயலாளர் மாவட்ட செயலாளர் அ.அருணகிரி, ஒன்றிய தலைவர் முன்னாள் மா.இராசப்பன், ஒன்றிய செயலாளர் ஆ.லட்சுமணன் ஆகியோர் முன்னிலை ஏற்று உரை யாற்றினார்கள். கழக செயல் திட்டங் களை விளக்கி கழகப் பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமார் அவர்கள் தொடக்க உரையாற்றினார். ஒன்றிய ப.க தலைவர் கு.நேரு, பெரியார் பெருந்தொண்டர் கோ.தம்பிக்கண்ணு, குழந்தை.லெனின், இ.இனியவன், அழகு.இராமகிருஷ்ணன் ஆகியோர் உரைக்குப் பின் கழக மாநில அமைப்பாளர் சிறப்புரையாற்றினார். புதிய பொறுப்பாளர்கள் அறிவிக்கப்பட் டன. கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.
தீர்மானம் 1: இரங்கல் தீர்மானம் பெரியார் பெருந்தொண்டர் கோ.தம்பிக் கண்ணு அவர்களின் மூத்த மகன் த.மணிமொழி மறைவிற்கு இக்கூட்டம் வீரவணக்கத்தினை தெரிவிப்பதுடன் அவரின் பிரிவால் வாடும் அவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதலை தெரிவித்துக்கொள்கிறது.
தீர்மானம் 2: ஆகஸ்டு 27 அன்று சேலத்தில் நடைபெறும் திராவிடர் கழகப் பவளவிழா மாநாட்டை விளக்கி சுவரெழுத்து விளம்பரம் செய்வது என்றும், மாநாட்டிற்கு அதிகமான தோழர்கள் செல்வது என முடிவு செய்யப்படுகிறது. தீர்மானம் 3: பெரியார் சுயமரியாதை பிரச்சார சுயமரியாதை அறக்கட்ட ளைக்கு கு.அய்யாத்துரை அவர்களை நியமனம் செய்த தமிழினத் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு இக்கூட்டம் நன்றியை தெரிவித்துக் கொள்கிறது.
தீர்மானம் 4: கலை அறப்பேரவை கலைவாணன் குழுவினரின் பகுத்தறிவு விளக்க பொம்மலாட்ட நிகழ்ச்சியினை ஏற்பாடு செய்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த முடிவு செய்யப் பட்டது.
புதிய பொறுப்பாளர்கள்
தலைவர்: தோ.தம்பிகண்ணு, செய லாளர்: வெ.விமல், அமைப்பாளர்: கு.லெனின், மகளிரணி அமைப்பாளர்: கு.ஜெயமணி, மகளிர் பாசறை அமைப்பாளர்: வி.கலைமகள், மாணவர் கழக தலைவர்: கி.இனியவன், செயலா ளர்: ம.தமிழமுதன்
படிப்பக பொறுப்பாளர்
புரவலர்கள்: இரா.குணசேகரன், கு.அய்யத்துரை, மு.வீரமணி, குழந்தை கவுதமன், ந.காமராஜ்
தலைவர்: கு.நேரு, செயலாளர்: கு.லெனின், பொருளாளர்: த.இங்கர் சால்.