செஞ்சியில் கோலாகலத்துடன் தொடங்கி வரலாறு படைத்த பகுத்தறிவாளர் கழக பொன்விழா நிறைவு மாநாடு – தலைவர்கள் எழுச்சியுரை


செஞ்சி, ஜூன் 20- பகுத்தறிவாளர் கழக பொன்விழா நிறைவு மாநாடு செஞ்சியில் நேற்று (19.6.2022) காலை தொடங்கி இரவு 11 மணியைக்கடந்தும் ஒரு நாள் முழுவ தும் தொடர் நிகழ்ச்சிகளுடன் எழுச்சியுடன் நடைபெற்றது.

பகுத்தறிவாளர் கழகப்புரவலர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் செஞ்சியில் பகுத்தறிவாளர் கழக பொன்விழா நிறைவு மாநாடு நடைபெறும் என்று அறிவித்த நாள் தொட்டு, தமிழ்நாடு முழுவதுமிருந்து கழகப்பொறுப்பாளர்கள் அதற் கான சுவரெழுத்துப் பரப்புரைகள், நிதி திரட்டல், செஞ்சி பய ணத்துக்கான திட்டமிடல் என  பொன்விழா நிறைவு மாநாடு பற்றியே சிந்தனையும் செயலுமாக இருந்தனர். அதன்படி, தமிழ்நாடு முழுவதுமிருந்து பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் தனி வாகனங்கள்மூலமும் குடும்பம் குடும்பமாக செஞ்சியில் திரண்டனர்.

மாநாட்டுக்கு அனைவரையும் அழைக்கும் வண்ணம் விழுப்புரம் மாவட்டத்தில் செஞ்சியைச் சுற்றிலும் சுவரெ ழுத்துகள், சுவரொட்டிகள், கழகக் கொடிகள் அமைக்கப் பட்டிருந்தன. சென்னையிலிருந்து செஞ்சிக்கு செல்லும் வழியில் திண்டிவனம் கழக மாவட்டத்தில் சாலையின் இருமருங்கிலும் கழகக் கொடிகள் அமைக்கப்பட்டு செஞ்சிக்கு செல்லும் வழியை நேர்படுத்தின.  நகர்முழுவதும் கொடிகள் அமைக்கப்பட்டு செஞ்சி நகரமே கோலாகல எழுச்சி பெற்றிருந்தது.

மாநாட்டுக்கு வருகைதருவோர் அனைவரும் தங்களை பதிவு செய்துகொள்ளவும், உடற்கொடை அளிப்பதற்கான உறுதி அளிக்கவும் படிவங்கள் அளிக்கப்பட்டு, அனைவரும் ஆர்வத்துடன் பதிவு செய்துகொண்டனர். மாநாட்டுக்கு வருகை தந்தோர் இயக்க ஏடுகளுக்கு சந்தாக்களை செலுத்த வும், புதுப்பித்துக் கொள்ளவும் வாய்ப்பு அளிக்கப்பட்டு அதற்கேற்ற ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இயக்க வெளியீடுகள் விற்பனைக்காக அழகுற காட்சிப்படுத்தப் படடிருந்தது.

செஞ்சி திருவண்ணாமலை சாலையில் வள்ளி அண்ணா மலை திருமண அரங்கத்தில் சுயமரியாதைச் சுடரொளி கெடார் சு.நடராசன் நினைவரங்கத்தில் கலைநிகழ்ச்சிகளுடன் பகுத்தறிவாளர் கழக பொன்விழா நிறைவு மாநாடு தொடங் கியது.

மாநில கலைத்துறைச்  செயலாளர் மாரி.கருணாநிதி ஒருங்கிணைப்பில் பகுத்தறிவு கலைநிகழ்ச்சிகள் நடை பெற்றன. பறையிசை, கரகாட்டம், ஒயிலாட்டம், சாட்டைக் குச்சியாட்டம் என விதவிதமாக கலைநிகழ்ச்சிகள், பகுத்தறிவு பாடல்களுடன் நடைபெற்றன.

இயற்கை கிராமிய கலைக்குழுவைச்சேர்ந்த எஸ்.ஸ்டா லின்ராஜா, சி.இராமலிங்கம், சி.வீரமணி, சி.இந்திராஜ், பி.பாஸ் கர், பி.பானுமதி, அய்.வைலட் கிறிஸ்டி, தென்னரசு, எம்.சந்துரு, கே.அறிவாசகன் ஆகியோர் கலைநிகழ்ச்சிகளை வழங்கினர்.

மாநாட்டையொட்டி அறிவியல் கண்காட்சி, தொல்லியல் அகழாய்வு கண்காட்சி அமைக்கப்பட்டிருந்தது.

புதுச்சேரி ராசா மகன்கள் பெரியார் பிஞ்சுகள் பிரபாகரன், அன்புசெல்வன் ஆகியோர் பார்வையாளர்களுக்கு முகக் கவசங்களை வழங்கினர்.

பகுத்தறிவாளர் கழக மாநிலத் தலைவர் இரா.தமிழ் செல்வன் தலைமை வகித்தார். பொதுச்செயலாளர் ஆ.வெங் கடேசன் வரவேற்றார்.

பகுத்தறிவாளர் கழக மாநில துணைத் தலைவர் பொறியா ளர் வேல் சோ.நெடுமாறன் மாநாட்டுத் தலைவரை முன் மொழிந்தார்.

கலை நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து மாநாட்டின் தீர்மான அரங்கம் நடைபெற்றது. பகுத்தறிவாளர் கழக மேனாள் தலைவர் திராவிடர் கழகப்பொருளாளர் வீ.குமரேசன் தலை மையில் கழகப் பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் தொடக்க உரையாற்றினார். அவர் உரையில், விருதுநகரில் கடந்த ஆண்டு நவம்பரில் பகுத்தறிவாளர் கழக பொன்விழா தொடக்க மாநாடு நடைபெற்றதைக் குறிப்பிட்டு, பொன்விழா நிறைவு மாநாடு செஞ்சியில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் அறிவித்தபடி எழுச்சியுடன் நடைபெறுவதை சுட்டிக்காட்டினார்.

பகுத்தறிவாளர் கழக மாநில துணைத் தலைவர் வேண் மாள் நன்னன், துணைத் தலைவர் அண்ணா.சரவணன், கலைத்துறைச் செயலாளர் மாரி.கருணாநிதி, ச.அழகிரி, பகுத்தறிவு ஆசிரியரணி மாநில அமைப்பாளர் இரா.சிவக்குமார், பகுத்தறிவாளர் கழக ஊடகப்பிரிவுத் தலைவர் மா.அழகிரிசாமி, அரூர் இராஜேந்திரன், பகுத்தறிவாளர் கழக மாநில துணைத்தலைவர் சி.ஏ.கு.ரஞ்சித்குமார், துணைத் தலைவர் கோபு.பழனிவேல், நாகை இல.மேகநாதன், பேராசிரியர் சுலோச்சனா, பகுத்தறிவு எழுத்தாளர் மன்ற துணைத் தலைவர் ம.கவிதா ஆகியோர் 12 தீர்மானங்களை முன்மொழிந்தனர்.

வரலாறு படைத்த சிறப்புத் தீர்மானம்

சிறப்புத் தீர்மானத்தை தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் முன்மொழிய, பார்வையாளர்கள் அனைவரும் எழுந்து நின்று நீண்ட கரவொலி எழுப்பி தீர்மானங்களை வரவேற்று நிறைவேற்றிக்கொடுத்தனர்.

செஞ்சிக்கோட்டைக்கும், பகுத்தறிவாளர் கழகத்திற்கும் வரலாறு இருக்கிறது என்பதற்கான அடையாளமாக தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களால் முன்மொழிந்து நிறை வேற்றப்பட்ட சிறப்புத் தீர்மானம் உள்ளது என்று கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் குறிப்பிட்டார்.

மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் மேனாள் துணைவேந்தர் பேராசிரியர்  முனைவர்  ஆர்.டி. சபாபதிமோகன் மாநாட்டுத் தொடக்க உரையாற்றினார். அவருக்கு கழகத்துணைத்தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் பயனாடை அணிவித்து, இயக்க வெளியீட்டினை வழங்கி சிறப்பு செய்தார்.

மாநாட்டை திறந்துவைத்து தமிழ்நாடு உயர்கல்வித்துறை அமைச்சர் முனைவர் க.பொன்முடி அவர்கள் சிறப்புரை ஆற்றினார். அவருக்கு தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் பயனாடை அணிவித்து இயக்க வெளியீடுகளை வழங்கி சிறப்பு செய்தார்,

தமிழ்நாடு சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் மாண்புமிகு செஞ்சி கே.எஸ்.மஸ்தான் அவர்களுக்கு தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் பயனாடை அணிவித்து சிறப்பு  செய்தார், ரூ.40ஆயிரம் அளித்து தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடமிருந்து இயக்க வெளியீடுகள் 750 நூல்களை அவர் பெற்றுக்கொண்டார். செஞ்சி பேரூராட்சித் தலைவர் மொக்தியார் பணிகளைப் பாராட்டி தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் பயனாடை அணிவித்து சிறப்பு செய்தார்.

தொடர்ந்து தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் சிறப்பு ரையாற்றினார்.

விழுப்புரம் கப்பூர் புதிய சிறகுகள் காவலர் பயிற்சி பெறும் இளைஞர்கள் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு அணிவகுப்பு மரியாதையை மேடையில் வழங்கி, தந்தை பெரியார் உருவப்படத்தை பரிசளித்து குழுப்படம் எடுத்துக் கொண்டனர்.

மேல்சித்தாமூர் அரசு மேனிலைப்பள்ளி மாணவ, மாணவியர் பகுத்தறிவு ஆசிரியர் அணி அமைப்பாளர்  செந்தில்வேலன் தலைமையில் தமிழர் தலைவருடன் குழுப்படம் எடுத்துக்கொண்டனர்.

பகுத்தறிவு அறிவியல் கருத்தரங்கம் கழக செயலவைத் தலைவர் சு.அறிவுக்கரசு தலைமையில் நடைபெற்றது. பகுத் தறிவாளர் கழக பொருளாளர் சி.தமிழ்செல்வன் வரவேற்றார். இணைப்புரையை பகுத்தறிவாளர் கழக பொதுச்செயலாளர் வி.மோகன் வழங்கினார்.

கருத்தரங்கத்தில் சுயமரியாதை வாழ்வே சுக வாழ்வு எனும் தலைப்பில்  கழகப் பொதுச்செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன், கடவுளை மற மனிதனை நினை தலைப்பில் பேராசிரியர் ப.காளிமுத்து, வெல்க திராவிடம் தலைப்பில் மதிமுக கொள்கை விளக்கஅணிச்செயலாளர் ஆ.வந்தியத்தேவன், பெண்ணுரிமை காப்போம் தலைப்பில் மகளிர் பாசறை மாநில அமைப்பாளர் வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி, அரசமைப்புச்சட்டம் கூறும் விஞ்ஞான மனப்பான்மை தலைப்பில் எழுத்தாளர் மன்றத் தலைவர் வா.நேரு, அறிவியலும் மூடநம்பிக்கையும் காட்சி விளக்கங் களுடன் டாக்டர் கணேஷ் வேலுசாமி  ஆகியோர் கருத்தரங்க உரையாற்றினார்கள்.

கருத்தரங்கத்தைத்தொடர்ந்து, மந்திரமா? தந்திரமா? பகுத்தறிவு செயல் விளக்கங்களை புதுவை குமார் வழங் கினார்.

60 ஆண்டு காலமாக ஒரே ஏடான பகுத்தறிவு ஏடான விடுதலையின் ஆசிரியராக சாதனையை படைத்து வருகின்ற தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு எடைக்கு எடை ரூ.5, ரூ.10 நாணயங்களை பகுத்தறிவாளர் கழக மாநில அமைப்பாளர் திருக்குவளை இல.மேகநாதன் அளித்தார். ஆசிரியர் அவர்களின் எடையைத்தாண்டி ரூ.50 ஆயிரம் தொகையை எட்டியது நாணயங்கள். இல.மேகநாதனைப் பாராட்டி அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் அவர்கள் பயனாடை அணிவித்து சிறப்பு செய்தார்.

100 வயதை எட்டிய ஆத்தூர் பெரியார் பெருந்தொண்டர் தங்கவேலுவுக்கு தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் பயனாடை அணிவித்து சிறப்பு செய்தார்.

விழுப்புரம் மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர் துரை.திருநாவுக்கரசு மாநாட்டின் வரவேற்புரை ஆற்றினார்.

திராவிட மாணவர் கழக மாநில செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார் இணைப்புரை வழங்கினார்.

படத் திறப்பு

சாவித்திரி பூலே படத்தை கழகப் பிரச்சாரச் செயலாளர் வழக்குரைஞர் அ.அருள்மொழி திறந்துவைத்து உரை யாற்றினார்.

தந்தை பெரியார் படத்தை பொதுப் பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு அவர்கள் திறந்துவைத்து எழுச்சிமிக்க உரையாற்றினார்,

பகுத்தறிவாளர் கழக பொன்விழா மாநாட்டின் சிறப்புத் தீர்மானத்தை தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் முன்மொழிந்து நிறைவேற்றியதைத் தொடர்ந்து மாநாட்டில் பகுத்தறிவாளர் கழகத்தின் சின்னமாக, கருப்புக் கொடியில் சிவப்பு கேள்விக்குறியுடன் கொடி அறிமுகப்படுத்தப்பட்டது. சுயமரியாதை  உலகு சமைப்போம் என்று அனைவரும் எழுச்சி முழக்கமிட்டனர்.

மாநாட்டில் காலை முதல் கலைநிகழ்ச்சிகளை வழங்கிய கலைக்குழுவினருக்கு தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் முன்னிலையில் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் பயனாடை அணிவித்து சிறப்புச் செய்தார்.

முத்தமிழறிஞர் கலைஞர் படத்தைத் திறந்துவைத்து கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் உரை யாற்றினார்.

அண்ணல் அம்பேத்கர் படத்தைத் திறந்து வைத்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் தோழர் இரா.முத்தரசன் எழுச்சிமிக்க உரையாற்றினார்.

தமிழ்நாடு சிறுபான்மை நலத்துறை அமைச்சர் மாண்புமிகு செஞ்சி கே.எஸ்.மஸ்தான் மாநாட்டில் வாழ்த்துரை ஆற்றினார்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் எழுச்சித் தமிழர் முனைவர் தொல்.திருமாவளவன் அறிஞர் அண்ணா படத்தைத் திறந்துவைத்து எழுச்சியுரை ஆற்றினார்.

அன்னை நாகம்மையார், அன்னை மணியம்மையார் படங்களைத் திறந்துவைத்து தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் மாநாட்டின் எழுச்சியுரை சிறப்புரையாற்றினார்.

மாநாட்டின் நிறைவாக விழுப்புரம் மாவட்ட பகுத்தறி வாளர் கழக செயலாளர் வே.இரகுநாதன் நன்றியுரை ஆற்றினார்.

மாநாட்டு வெற்றிக்கு பாடுபட்ட அத்துணைப் பொறுப் பாளர்களுக்கும் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் பய னாடை அணித்து சிறப்பு செய்தார்.

மாநாட்டில் திராவிடர் கழக, பகுத்தறிவாளர் கழக பொறுப் பாளர்கள் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும், புதுச்சேரியி லிருந்தும் குடும்பத்துடன் திரண்டிருந்தனர்.

திமுக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சியினர், கட்சி களைக் கடந்து ஏராளமானவர்கள் பகுத்தறிவாளர் கழக  பொன்விழா நிறைவு மாநாட்டில் தலைவர்களின் உரைகேட்க பெருந்திரளாக குழுமியிருந்தனர்.

அரங்கம் முழுவதும் மக்கள் பெருந்திரள் நிறைந்திருந் ததுடன்   அரங்கின் வெளியிலும் தலைவர்கள் உரைகேட்க மக்கள் கூடியிருந்தனர்.

மாநாட்டுக்கு வருகைபுரிந்த தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் பகுத்தறிவாளர் கழக பொன்விழா நிறைவு மாநாட்டு நினைவு கொடிக்கம்பத்தில் கழகக்கொடியை ஏற்றிவைத்தார். பழங்குடி இருளர் அமைப்பின் தலைவர் சுடரொளி சுந்தரம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் பொறுப்பாளர்கள் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு சிறப்பான வரவேற்பு அளித்தனர்.