குமரி மாவட்ட பகுத்தறிவாளர் கழக சிறப்புக் கூட்டம்

குமரி மாவட்ட பகுத்தறிவாளர் கழக சிறப்புக் கூட்டம் இன்று
(23.06.2019 ஞாயிறு )மாலை 5 மணிக்கு நாகர்கோவில் ஒழுகினசேரி பெரியார் மய்யத்தில் நடந்தது
#உலகைஇயக்குவது_இயற்கையா?
#கடவுளா? என்ற தலைப்பில்
திருவனந்தபுரம் ஆதிமுருகன் சிறப்புரை ஆற்றினார்.
பகுத்தறிவாளர் கழகம் மாவட்ட தலைவர் உ.சிவதாணு தலைமைதாங்க விடுதலை வாசகர் வட்ட தலைவர் முனைவர் ஜே. ரி. ஜூலியஸ் முன்னிலை வகித்தார். திக திருநெல்வேலி மண்டல செயலாளர் கோ வெற்றி வேந்தன் நிகழ்ச்சியில் தொடக்கவுரையாற்றினார். தோழர்கள் பலரும் கலந்து கொண்டனர்.