குவைத், அக்.19 பன்னாட்டு திமுக சார்பில் முப்பெரும் விழா குவைத், தஸ்மா டீச்சர் சொசைட்டி அரங்கில் 12.10.2018 அன்று மாலை 6 மணிக்கு நடைபெற்றது.
தந்தை பெரியார் பிறந்த நாள் விழா, அறிஞர் அண்ணா பிறந்த நாள் விழா உள்ளிட்ட விழாவாக நடந்தேறியது. நிகழ்ச்சிக்கு மு.பஷீர் அகமது தலைமை தாங்கினார். பொருளாளர் சிதம்பரம் ந.தியாகராஜன் வரவேற்புரையாற்றினார். உலக தத்துவஞானி தந்தை பெரியார் நூலக காப்பாளர் ச.செல்லப்பெருமாள், வி.சி.க. முதன்மை செயலாளர் கமீ.அன் பரசன், இஸ்லாமிய கலாச்சார பேரவை தலைவர் ஆரிப் மரைக்காயர், திராவிடர் கழக இரா.சித்தார்த்தன் ஆகியோர் முன் னிலை உரையாற்றினர். சிறப்பு விருந்தி னராக சுப்ரீம் டிராவல்ஸ், குவைத் கார்கோ நிறுவனர் அபுபக்கர் சித்திக் சிறப்பு விருந்தினராக வந்து உரையாற்றினார். திமுக ஆலோசகர் ஆலஞ்சியார் துவக்க உரையாற்றினார். தூத்துக்குடி பெரியார் மய்ய காப்பாளர் சு.காசி உரையாற்றினார்.
குவைத் ஆசிரியை ஜெசிமா சிராஜூ தீன் ‘கலைஞர் பார்வையில் பெண்கள் நலன்’ என்ற தலைப்பில் உரையாற்றினார். பகுத்தறிவாளர் கழக மாநில தலைவர் மா.அழகிரிசாமி “ஏன் இன்னும் தேவைப் படுகிறார் பெரியார்” என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். திராவிட சித்தாந்தம் தோற்றுப்போய் விட்டதா என்ற தலைப் பில் வி.சி.க. மாநில துணைப் பொதுச் செயலாளர் ஆளூர் ஷாநவாஸ் சிறப்புரை யாற்றினார். “திராவிடப் பெருந்தலைவர் கலைஞரின் பேராளுமை” என்ற தலைப்பில் திமுக செய்தித் தொடர்பு இணைச் செய லாளர் தமிழன் பிரசன்னா சிறப்புரையாற்றி னார். இளைஞர் அணிச் செயலாளர் கே.அப்துல்ஜமீல் நன்றி கூறினார். அரங்கு முழுவதும் மக்கள் திரண்டு இருந்து இருக்கைகள் போதாமல் நின்று கொண்டே நிகழ்வை கண்டு மகிழ்ந்தனர்.